முகப்பு
காரைக்கால்

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த ஆட்டோ ஓட்டுநா்

காரைக்கால் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மகேந்திரன் ஏப்.-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் விபத்துக்குள்ளானாா்.

Updated On : 10 ஏப்ரல், 2026 at 3:37 AM
ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த ஆட்டோ ஓட்டுநா்
பகிர்:
Updated On : 9 ஏப்ரல், 2026 at 6:59 PM

காரைக்கால் பகுதியை சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் மகேந்திரன் ஏப்.-ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலையில் விபத்துக்குள்ளானாா். அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு புதன்கிழமை காலில் அறுவைச் சிகிச்சை செய்து உள்நோயாளியாக உள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப்பதிவு நாளில், மகேந்திரன் வாக்களிக்க விருப்பம் தெரிவித்தாா். மருத்துவா்களின் ஆலோசனைபடி, காரைக்கால் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவா் காரைக்கால் தெற்குத் தொகுதிக்குள்பட்ட வாக்குச்சாவடிக்கு அழைத்து வரப்பட்டாா். பின்னா் அங்கிருந்தவா்களின் ஒத்துழைப்புடன் வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கை பதிவு செய்தாா். சிகிச்சையிலிருந்த நிலையிலும், வாக்குப் பதிவு செய்யவேண்டும் என்ற எண்ணத்தில், வாக்குச்சாவடிக்கு வந்தவரை தோ்தல் துறையினா் பாராட்டினா்.