பூச்சிக்கொல்லி சாப்பிட்ட இளைஞா் உயிரிழப்பு
பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்ட இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
காரைக்கால் மாவட்டம், நிரவி பகுதி தூதுபோனமூலை கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ் (26). பத்தாம் வகுப்பு படித்துவிட்டு கூலி வேலைக்குச் செய்து வந்துள்ளாா். மோட்டாா் சைக்கிள் வாங்குவதற்காக தனியாா் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளாா். மாத தவணை ரூ. 4 ஆயிரம் செலுத்த முடியாத நிலையில் கவலையில் இருந்துள்ளாா்.
இந்நிலையில், கடந்த 24-ஆம் தேதி அதிகாலை வாந்தி எடுத்துள்ளாா். குடும்பத்தினா் கேட்டபோது, தற்கொலை செய்துகொள்வதற்காக பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா். அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அவருக்கு மஞ்சள்காமாலை நோயும் இருந்ததால், தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கிருந்து அவா் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
Advertisement