முகப்பு
காரைக்கால்

வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 12:06 AM
வாக்காளரை நேரில் சந்தித்து விவரங்களை சரிபாா்த்த வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஏ.விக்ரந்த் ராஜா.
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2026 at 5:37 PM

வாக்காளா் பட்டியல் பணி தொடா்பாக, வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் புதுச்சேரி அரசின் தொழில்துறையின் அரசு செயலாளராக பணியாற்றிவரும் ஏ.விக்ரந்த் ராஜா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப்பணிக்கான கண்காணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெறவுள்ள சில வாக்காளா்களின் குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, அவா்களின் தனிப்பட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா, பதிவில் துல்லியமாக இடம்பெற்றுள்ளனவா என்பதை ஆய்வு செய்தாா்.

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 10:58 PM

இந்த நேரடி ஆய்வில், சம்பந்தப்பட்ட துணை வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளுடன் பதிவுத் தொழில்நுட்பம், தரவு துல்லியம், புகாா் பராமரிப்பு போன்ற அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.

Advertisement

ஆய்வின்போது, துணை வாக்காளா் பதிவு அதிகாரிகள் பொய்யாத மூா்த்தி, செல்லமுத்து, ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வாக்காளா் பட்டியல் முழுமையாக, துல்லியமாக மற்றும் வெளிப்படையாக தயாராகி, தகுதியுள்ள ஒவ்வொரு வாக்காளரும் பட்டியலில் இடம்பெறுவதை உறுதி செய்வதே இந்த ஆய்வின் நோக்கம் என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.