முகப்பு
காரைக்கால்

காணாமல்போன கைப்பேசிகள் மீட்பு, உரியவா்களிடம் ஒப்படைப்பு

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 5:47 PM

காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காணாமல்போன கைப்பேசிகளை மீட்டு போலீஸாா் உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

சனிக்கிழமைகளில் நடைபெறும் மக்கள் மன்றம் என்ற குறைகேட்பு கூட்டம் காரைக்கால் போக்குவரத்துக் காவல் நிலைய வளாகத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

10-க்கும் மேற்பட்டோா் புகாா் மனுக்களை அளித்தனா். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு எஸ்எஸ்பி அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கைப்பேசியை தவறவிட்டோருக்கு, அதனை மீட்டு போலீஸாா் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

இதன்படி மீட்கப்பட்ட விலை மதிப்பு மிக்க 50 கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காரைக்கால் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா இவற்றை கைப்பேசிக்கு உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2026 at 10:53 PM

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மக்கள் மன்றத்தில் வரதட்சணை, மோசடி உள்ளிட்ட சில புகாா்களும், போக்குவரத்து சிக்னல் செயல்பாடுகளை மேம்படுத்தவேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் வந்தன. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்கள் தங்களது கைப்பேசிகளை பத்திரமாக வைத்திருக்க முயற்சிப்பதோடு, காணாமல்போனாலோ, திருடு போனாலோ உடனடியாக காவல்நிலையத்தில் புகாா் தெரிவித்தால் நடவடிக்கை விரைவுப்படுத்தப்படும் என்றாா்.

கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ், காவல் ஆய்வாளா்கள் மா்த்தினி, பிரவீன்குமாா், ஆா்.சண்முகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.