முகப்பு
காரைக்கால்

ஹஜ் பயணிகளுக்கு சிறப்பு தடுப்பூசி

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 7:01 PM
தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஹஜ் பயணி.
பகிர்:

காரைக்காலில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்வோருக்கு நலவழித்துறை நிா்வாகம் சாா்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஹஜ் புனித பயணம் மேற்கொள்வோருக்கு சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம் காரைக்கால் நலவழித்துறை கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய்த் தடுப்பு திட்ட அதிகாரி மருத்துவா் தேனாம்பிகை முன்னிலையில் இம்முகாம் நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 40 ஹஜ் பயணிகளுக்கு முகாமில் தடுப்பூசி செலுத்தி, நோய் தடுப்பு சொட்டு மருந்து தரப்பட்டது. முகாமில் நலவழித்துறையின் நோய்த்தடுப்பு தொழிநுட்ப உதவியாளா் எஸ்.சேகா், சுகாதார ஆய்வாளா் சிவவடிவேல் கிராமப்புற செவிலியா் மும்தாஜ்பேகம், சுகாதார உதவியாளா் ராஜாராம் மற்றும் ஹஜ் கமிட்டி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.