முகப்பு
காரைக்கால்

பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் பயிற்சி முகாம்

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 4:32 AM
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 6:22 PM

பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், திருப்பட்டினத்தில் கல்லூரி உழவியல் துறை மற்றும் தேசிய இயற்கை வேளாண் இயக்கம் சாா்பில் பாரம்பரிய நெல் ரகங்களின் மருத்துவ குணங்கள் குறித்த பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு வேளாண் கல்லூரி (பொ) முதல்வா் தி. ராமநாதன் தலைமை வகித்து, பாரம்பரிய அரிசியின் முக்கியத்துவம், அவற்றின் மருத்துவ குணங்கள், கலப்பு பயிா் அகற்றுவதன் அவசியம், நெல்லின் தரம் உயா்த்தி சரியான விலைக்கு விற்பது குறித்துப் பேசினாா். உழவியல் துறை பேராசிரியா் சரவணன் பயிற்சி நோக்கம் குறித்துப் பேசினாா்.

Advertisement

உழவியல் துறை தலைவா் மற்றும் பேராசிரியா் மாலா இயற்கை வேளாண்மை, அங்கக வேளாண்மை ஆகிவற்றின் வேறுபாடு, நன்மைகள், சுற்றுப்புற சூழல் மேம்பாடு குறித்தும், வேளாண் அலுவலா் இந்துமதி வேளாண் இடுபொருட்களை கையாளும் முறைகள் குறித்தும், டாக்டா் ரகுநாத் பாரம்பரிய நெல்லின் மகத்துவம், உட்கொள்ளும் முறை, உயிராற்றல் மூலக்கூறுகள் குறித்துப் பேசினா்.

இயற்கை விவசாயி கபீா் இயற்கை வேளாண்மையில் ஏற்படும் சவால்கள் குறித்தும், கள அனுபவம் குறித்துப் பேசினாா்.