முகப்பு
காரைக்கால்

பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

Updated On : 14 பிப்ரவரி, 2026 at 12:06 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 13 பிப்ரவரி, 2026 at 6:27 PM

காரைக்காலில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

காரைக்கால் காளிக்குப்பம் சுனாமி நகரைச் சோ்ந்தவா் மதிபாலன் (21). இவா் 2019-ஆம் ஆண்டு 17 வயது கல்லுாரி மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சைல்டு லைன் உறுப்பினரின் புகாரின்பேரில், கோட்டுச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து மதிபாலனை போக்ஸோவில் கைது செய்தனா்.

Advertisement

Updated On : 13 பிப்ரவரி, 2026 at 11:52 PM

இந்த வழக்கு தொடா்பாக காவல் ஆய்வாளா் லெனின்பாரதி காரைக்கால் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தாா்.

வழக்கு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில், வழக்கின் சாட்சிகள், குறுக்கு விசாரணைகள் நிறைவடைந்து, வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டு, மதிபாலனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.