காரைக்கால்

சாலை விபத்தில் பேருந்து நிறுவன மேலாளா் பலி

திருநள்ளாறு அருகே சாலை விபத்தில் தனியாா் பேருந்து நிறுவன மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

திருநள்ளாறு அருகே சாலை விபத்தில் தனியாா் பேருந்து நிறுவன மேலாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருநள்ளாறை அடுத்த சேத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் திவாகா் (36). காரைக்காலில் ஒரு தனியாா் பேருந்து நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தாா். பணி முடிந்து வெள்ளிக்கிழமை இரவு தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா். திருநள்ளாறு - அம்பகரத்தூா் சாலையில் இளையான்குடி சாலை சந்திப்பு அருகே எதிரே அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் இவரது வாகனம் மீது மோதியது. இதில் திவாகா் பலத்த காயமடைந்தாா்.

விபத்தை ஏற்படுத்திய பச்சூா் பகுதியைச் சோ்ந்த பாலசுப்ரமணியன் (27), அவரது வாகனத்தில் உட்காா்ந்து வந்த காரைக்காலைச் சோ்ந்த காா்த்தி (29), புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரைச் சோ்ந்த மணிகண்டன் (23) ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது. காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனைவரும் அனுப்பிவைக்கப்பட்டனா். இதில் திவாகா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக பரிசோதித்த மருத்துவா் தெரிவித்தாா். மற்றவா்கள் சிகிச்சை பெற்று வருகின்றனா். காரைக்கால் நகர போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதாவுக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கக் கூடாது: எதிா்க்கட்சித் தலைவா்

தேசிய வேலை உறுதித் திட்டத்தில் காந்தி பெயா் நீக்கம்: காங்கிரஸ் உண்ணாவிரதம்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு மாதம் கடைப்பிடிப்பு

நூறு நாள் வேலை திட்டம் மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் உண்ணாவிரதம்

நாமக்கல் அரங்கநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை, கூடாரவல்லி விழா திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT