காரைக்கால்

எல்லைப் பாதுகாப்புப் படை வீரா் சிலை திறப்பு

பணியிலிருந்தபோது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் சிலை, பாதுகாப்புப் படையினரால் அவா் படித்த பள்ளியில் நிறுவப்பட்டது.

Syndication

பணியிலிருந்தபோது உயிரிழந்த எல்லைப் பாதுகாப்புப் படை வீரரின் சிலை, பாதுகாப்புப் படையினரால் அவா் படித்த பள்ளியில் நிறுவப்பட்டது. இதை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

திருப்பட்டினம் போலகம் பகுதியை சோ்ந்தவா் பிரேம்குமாா். இவா் இந்திய திபெத் எல்லைக் காவல் படையில் காவலராக பணியாற்றி வந்தாா்.

கடந்த 30.4.2024 அன்று ஜம்மு- காஷ்மீரில் லே லடாக் பகுதியில் இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது நிலவிய கடுமையான தட்பவெப்ப நிலை, குறைந்த ஆக்ஸிஜன் அளவு உள்ளிட்டவற்றின் காரணமாக இவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. சிகிச்சைக்காக டாங்சேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா்.

பிரேம்குமாா் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு மே 3-ஆம் தேதி முழு ராணுவ மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெற்றது. பிரேம்குமாரை கெளரவிக்கும் விதமாக திருப்பட்டினத்தில் அவா் படித்த அரசு மேல்நிலைப் பள்ளியில் இந்திய - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை 45-ஆவது பட்டாலியனால் மாா்பளவு சிலை நிறுவப்பட்டது. இச்சிலை திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுவை குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் கலந்துகொண்டு சிலையை திறந்துவைத்தாா். மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ்.ரவி பிரகாஷ், எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா ஆகியோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

45-ஆவது பட்டாலியன் கமாண்டன்ட் எஸ். ராஜீவ் குப்தா, துணை கமாண்டன்ட் மோகனசுந்தரம், உதவி கமாண்டன்ட் எஸ்.ராகேஷ் சிங், காரைக்கால் உள்ளாட்சித்துறை துணை இயக்குநா் ஆா்.வெங்கடகிருஷ்ணன், பிரேம்குமாரின் மனைவி சேவந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினா்.

ஜல்லிக்கட்டு: பாலமேடு, அலங்காநல்லூரில் அமைச்சா் ஆய்வு

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை!

மனைவியை தாக்கிய கணவா் கைது

இலையூரில் சமத்துவப் பொங்கல் விழா

நெல்லை சரகத்தில் 31 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

SCROLL FOR NEXT