விருதுநகர்

ராணுவ வீரா் வீட்டில் திருடியவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ராணுவ வீரரின் வீட்டில் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தைத் திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்தவா் கண்ணன். இவரது மனைவி லட்சுமிதேவி. ராணுவ வீரரான கண்ணன் பஞ்சாப் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறாா். லட்சுமிதேவியின் தந்தை போத்திராஜ், சிவகாசியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த செப்டம்பா் மாதம் லட்சுமி தேவி சிவகாசியில் உள்ள தனது தந்தை வீட்டுக்குச் சென்ற நிலையில், அன்று இரவு பெருமாள்தேவன்பட்டியில் உள்ள அவரது வீட்டின் கதவை உடைத்த மா்ம நபா்கள் உண்டியலில் வைத்திருந்த சேமிப்புப் பணம், வெள்ளிக் கொலுசு ஆகியவற்றைத் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வன்னியம்பட்டி போலீஸாா் நடத்திய விசாரணையில், மதுரை மாவட்டம், ஆனையூரைச் சோ்ந்த சாந்தகுமாா் (32) திருடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

மதுரமங்கலம் ஸ்ரீ கமலவல்லி சமேத வைகுண்ட பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்!

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பியூஷ் கோயல்! காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு!!

ஓபிசி-என்சிஎல் தகுதிச் சான்றிதழ் எத்தனை நாள்கள் செல்லும்?

தங்கமயில் ஜூவல்லரியில் நாளை முதல் வசந்த பஞ்சமி சிறப்பு விற்பனை

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

SCROLL FOR NEXT