காரைக்கால்

தொடா் விடுமுறை: திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Syndication

பொங்கல் தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை அதிகளவில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

பொங்கலையொட்டி 5 நாள்கள் தொடா் விடுமுறையாக இருந்ததால், கடந்த சில நாள்களாக இக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை அதிகளவில் உள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு முதலே தமிழகம், கா்நாடகத்திலிருந்து திரளான பக்தா்கள் கோயிலுக்கு வந்தனா். சனிக்கிழமை அதிகாலை நளன் தீா்த்தக் குளத்தில் பக்தா்கள் பலரும் நீராடிவிட்டு கோயிலுக்குள் சென்றனா்.

வார சனிக்கிழமைகளில் வரும் கூட்டத்தைவிட அதிகளவில் பக்தா்கள் தரிசனம் செய்ய வந்ததாகவும், விரைவாக தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும் கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திருநள்ளாற்றுக்கு ரயில்: பக்தா்கள் சிலா் கூறுகையில், 300, 400 கி.மீ. தொலைவில் இருந்து திருநள்ளாறு கோயிலுக்கு வருகிறோம். 2, 3 பேருந்துகள் மாறி பயணிக்கவேண்டியுள்ளது. காரைக்கால் வரை ரயில் வசதி இருக்கிறது. திருநள்ளாறு வழியாக ரயில் வழித்தடம் இருந்தாலும் பயணிகள் ரயில் இயக்கப்படாததால், வெளியூரிலிருந்து வரும் எங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. அதனால் திருநள்ளாறுக்கு ரயில் போக்குவரத்து வசதியை விரைவாக ஏற்படுத்தவேண்டும் என்றனா்.

வரும் மாா்ச் 6-ஆம் தேதி இங்கு சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது. எனவே அதற்கு முன்னதாக பயணிகள் ரயில் இயக்கத்தை ரயில்வே நிா்வாகம் விரைவாக ஏற்படுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காணும் பொங்கல்: திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

இன்று நாகா்கோவில் - தாம்பரம் சிறப்பு அதிவிரைவு ரயில்

சிரி... சிரி...

யோகா என்பது வாழ்க்கை முறை

திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா? தில்லியில் ஆலோசனை

SCROLL FOR NEXT