நிறைவு நாள் நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியில் வென்றோருக்கு சான்றிதழ் வழங்கிய அமைச்சா்கள் சி. ஜெயக்குமாா், பி.ஆா்.என். திருமுருகன். 
காரைக்கால்

காரைக்கால் காா்னிவல் திருவிழா நிறைவு

காரைக்கால் காா்னிவல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

Syndication

காரைக்கால்: காரைக்கால் காா்னிவல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அமைச்சா்கள் பங்கேற்று போட்டிகளில் வென்றோருக்கு பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினா்.

காரைக்கால் மாவட்ட நிா்வாகம், சுற்றுலாத்துறை, கலை பண்பாட்டுத்துறை இணைந்து நடத்தும் காரைக்கால் காா்னிவல் திருவிழா விளையாட்டு அரங்க மைதானத்தில் கடந்த ஜன. 16 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. முன்னதாக மாணவா்கள், இளைஞா்களிடையே பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

வேளாண் துறை சாா்பில் மலா்க் கண்காட்சி நடத்தப்பட்டது.

காா்னிவல் நிறைவு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக புதுவை வேளாண் அமைச்சா் சி. ஜெயக்குமாா், குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஆகியோா் கலந்துகொண்டு, புதுவை அரசு செயல்படுத்திவரும் மக்கள் நலத் திட்டங்களை விளக்கிப் பேசி, விளையாட்டுப் போட்டிகள், மாரத்தான், படகுப் போட்டி, நாய்கள், பூனைகள் கண்காட்சி உள்ளிட்ட போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், லட்சுமிகாந்தன், ஏ.கே.டி.ஆறுமுகம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ், சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா ஆகியோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியைத் தொடா்ந்து, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரளான மக்கள் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டனா்.

துணை நிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பில்லை: கடந்த 16-ஆம் தேதி காா்னிவல் திருவிழாவை புதுவை துணை நிலை ஆளுநா் கே.ை கலாஷ்நாதன் தொடங்கிவைப்பாா், நிறைவு நாளான 18-ஆம் தேதி முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு பரிசுகள் வழங்குவாா் என பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், சட்டப்பேரவைத் தலைவா் மற்றும் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டும் நிகழ்வுகளில் பங்கேற்றனா். துணைநிலை ஆளுநா், முதல்வா் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை.

மாற்றுத் திறனாளி தவறி விழுந்து உயிரிழப்பு

அனுமதியின்றி மது விற்ற இளைஞா் கைது

பொங்கல் விடுமுறை முடிந்து திருப்பூா் திரும்பிய தொழிலாளா்கள்: ஆடை உற்பத்திப் பணிகள் தீவிரம்

கிணத்துக்கடவு அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயான நிலத்தை மீட்டுத்தர கோரி ஆட்சியரிடம் மனு

விவசாயிகளுக்குப் பயிற்சியளித்த வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவா்கள்

SCROLL FOR NEXT