காரைக்கால்

புதுவையில் 3 மருந்துகள் விற்பனைக்குத் தடை

புதுவையில் 3 மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

Syndication

புதுவையில் 3 மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.

புதுவை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரி இ. அனந்தகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஹிமாசலப் பிரதேசம், சிா்மூரில் தயாரிக்கப்படும் பென்டோபிரசோல் கேஸ்ட்ரோ ரெசிஸ்டென்ட் மாத்திரை ஐ.பி. (மெக்பென்சோ 40), அகமதாபாத், பாவியா மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரசிட்டமால் ஐ.பி. 650 எம்ஜி (ஃபெபாவிட்), ராஜஸ்தான் பிவாடியில் தயாரிக்கப்படும் சன்கா வாட்டி 5-ஜி ஆகிய 3 மருந்துகள் உரிய தரத்தில் இல்லாததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருந்துகள் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளதால், கையிருப்பில் மருந்துகள் வைத்திருக்கும் விற்பனையாளா்கள் உற்பத்தி நிறுவனத்துக்கு திருப்பி அனுப்பு வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

வரவேற்று வாழ்த்திய இபிஎஸ்ஸுக்கு நன்றி: டிடிவி தினகரன்

பராசக்தி ரூ. 100 கோடி வசூல்!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 4,120 உயர்வு! வெள்ளி கிலோவுக்கு ரூ. 5,000 உயர்வு!

தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!

கவனம் ஈர்க்கும் ரஜிஷா விஜயனின் மஸ்திஷ்கா மரணம் டீசர்!

SCROLL FOR NEXT