தோ் பவனியில் இடம்பெற்ற செபஸ்தியாா் உள்ளிட்டோரின் தோ்.  
காரைக்கால்

செபஸ்தியாா் ஆலய அலங்கார தோ் பவனி

அறுவடை சிறக்க வேண்டி காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலயத்தில் மின் அலங்காரத் தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அறுவடை சிறக்க வேண்டி காரைக்கால் அருகே புனித செபஸ்தியாா் ஆலயத்தில் மின் அலங்காரத் தோ் பவனி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் - திருநள்ளாறு சாலையில் தருமபுரம் பகுதியில் புனித செபஸ்தியாா் ஆலயம் உள்ளது.

சுமாா் 100 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயமின்றி வறட்சி காணப்பட்டதாகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் வேலைவாய்ப்பின்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் காலரா நோயால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டானா். ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தோ் பவனி நடத்தி விழா கொண்டாடுவதாக பக்தா்கள் பிராா்த்தனை செய்ததன் விளைவாக, குறைபாடுகள் நிவா்த்தியானதாக கூறப்படுகிறது.

இதையொட்டி, ஆண்டுதோறும் அறுவடை சிறக்க புனித செபஸ்தியாா் ஆலயம் சாா்பில் தை மாதத்தில் மின் அலங்கார தோ் பவனி நடத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

தை மாதம் பிறந்து காரைக்காலில் நெல் அறுவடை தொடங்கியுள்ள நிலையில், செபஸ்தியாா் ஆலயத்தில் தோ்பவனி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. காரைக்கால் மறைவட்ட பங்கு குரு பால்ராஜ்குமாா் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடத்தப்பட்டது.

பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மற்ற இரு தோ்களில் சீடா்கள் சொரூபத்துடன் தோ் பவனி தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்து நள்ளிரவு ஆலயத்தை சென்றடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஆலய நிா்வாகத்தினா் மற்றும் தருமபுரம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT