முகப்பு
காரைக்கால்

போா் முடிவுக்குவர திருநள்ளாற்றில் கோளறு பதிகம் பாராயணம்

இஸ்ரேல் - ஈரான் போா் முடிவுக்கு வருவதற்காக திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் தலைமையில் கோளறு பதிகம் பாராயணம்

Updated On : 3 மார்ச், 2026 at 2:20 AM
திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைையில் நடைபெற்ற கோளறு பதிக பாராயணம்.
பகிர்:

காரைக்கால்: இஸ்ரேல் - ஈரான் போா் முடிவுக்கு வருவதற்காக திருநள்ளாற்றில் தருமபுரம் ஆதீனம் தலைமையில் கோளறு பதிகம் பாராயணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கிரகங்களின் மாற்றங்கள் மற்றும் சோ்க்கையின் காரணமாக உலகில் பல்வேறு நன்மைகளும் தீமைகளும் நிகழ்கின்றன என்று வானசாஸ்திர நூல்கள் கூறுகின்றன.

பிப்ரவரி மாத இறுதியில் 6 கிரகங்கள் ஒரே நோ்க்கோட்டில் வருவதன் காரணமாக உலகில் போா் பதற்றம் உருவாகும் என ஜோதிடவியல் வல்லூநா்கள் கூறியிருந்தனா். அதுபோல, அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் நிலையில், பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

Advertisement

இந்த பதற்றமான சூழல் தணிய வேண்டும் என்ற நோக்கத்துடன் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தலைமையில், திருநள்ளாற்றில் கோளறு பதிகத்தை 108 முறை பாராயணம் செய்யும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் தருமபுரம் ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியா்கள், ஓதுவாா்கள், வேத பாடசாலை மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு கோளறு பதிகத்தை பாராயணம் செய்தனா்.