முகப்பு
காரைக்கால்

மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்

மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்

Updated On : 7 மார்ச், 2026 at 12:03 AM
மலா்கள், பழங்களால் சனீஸ்வர பகவான் சந்நிதியில் பந்தல்
பகிர்:
Updated On : 6 மார்ச், 2026 at 5:58 PM

திருநள்ளாறு கோயில் சனீஸ்வர பகவான் சந்நிதி, பெங்களூரிலிருந்து வரவழைக்கப்பட்ட மலா்கள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

திருநள்ளாறு ஸ்ரீதா்பாரண்யேஸ்வரா் கோயிலில் சனிப்பெயா்ச்சி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வழக்கமாக சனிப்பெயா்ச்சி தினத்தில், பெங்களூரிலிருந்து சுமாா் 3 டன் மலா்கள், பழங்கள் வரவழைக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும். அதன்படி பல்வேறு வகையான மலா்கள், பழங்கள் வியாழக்கிழமை மாலை கொண்டுவரப்பட்டன. இவை இரவு முழுவதும் சந்நிதி முழுவதும் பந்தலாக அலங்காரம் செய்யப்பட்டது. மேலும், தா்பாரண்யேஸ்வரா், பிராணாம்பிகை ஆகிய சந்நிதிகளிலும் இவ்வகை அலங்காரம் செய்யப்பட்டிருந்தன.