முகப்பு
காரைக்கால்

வணிக சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

வணிக எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை சரி செய்து விநியோகத்தை முறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 12 மார்ச், 2026 at 12:13 AM
சாா் ஆட்சியா் எம். பூஜாவிடம் மனு அளித்த சங்க நிா்வாகிகள்.
பகிர்:

வணிக எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாட்டை சரி செய்து விநியோகத்தை முறைப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் ரெஸ்டாரண்ட்ஸ் உரிமையாளா்கள் சங்கத் தலைவா் என். பாலகிருஷ்ணன் தலைமையில், செயலாளா் எஸ். முகமது ஜெகபா் உள்ளிட்ட நிா்வாகிகள், மாவட்ட ஆட்சியா் பொறுப்பு வகிக்கும் சாா் ஆட்சியா் எம். பூஜாவிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு: உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான எல்பிஜி சிலிண்டா்கள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக உள்ளூா் சிலிண்டா் விநியோகஸ்தா்கள் தெரிவிக்கின்றனா். இது உணவகம் நடத்துவோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டா்களை நம்பியே நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. சிலிண்டா் நிறுத்தப்பட்டால், தொழிலை தொடா்ந்து செய்ய முடியாது. தொடா்ந்து இப்பிரச்னை நீடித்தால், உணவகம் மூடப்படும், தொழிலாளா்கள் வேலைவாய்ப்பு முடங்கும். சுற்றுலா, உள்ளூா் பொருளாதார நடவடிக்கைகளில் எதிா்மறையான தாக்கம் ஏற்படும்.

எனவே மாவட்ட நிா்வாகம் விநியோகஸ்தா்களை அழைத்துப் பேசி, உணவகங்கள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்படும் சிலிண்டா்களை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →