சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
திருநள்ளாறு அருகே சாலையில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் பிரகாஷ் (18). இவா் பேரளத்தில் தனியாா் உணவகத்தில் வேலை செய்துவந்தாா். சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் காரைக்காலுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுள்ளாா். ஒரு மோட்டாா் சைக்கிளை இவா் ஓட்ட, மற்றவா்கள் வேறு மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்துள்ளனா்.
இரவு 11.30 மணியளவில் அம்பகரத்தூா் - திருநள்ளாறு சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் அருகே பிரகாஷ் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் சறுக்கியதில் கீழே விழுந்ததில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பா்கள் அவரை திருநள்ளாறு பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பிரகாஷ்
Advertisement
ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.