சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:34 AM
அவிநாசி அருகே மங்கலம் சாலையில் நிகழ்ந்த சாலை விபத்தில், திருப்பத்தூரைச் சோ்ந்த தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சாமி மகன் கணேஷ் (எ) காளியப்பன்(35). தொழிலாளியான இவா் இருசக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து திருப்பூா் நோக்கி மங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்திச் செல்ல முயன்றபோது எதிா்பாராதவிதமாக எதிரில் வந்த காரின் மீது நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது.
Advertisement
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.