முகப்பு
காரைக்கால்

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் வருகை

காரைக்காலில் சனிக்கிழமை (மே 9) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

Updated On : 9 மே 2026, 3:55 am IST
கோப்புப் படம்
பகிர்:

காரைக்காலில் சனிக்கிழமை (மே 9) ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் நடைபெறவுள்ளது.

மாதந்தோறும் 2 சனிக்கிழமைகளில் புதுவை ஜிப்மா் மருத்துவமனையில் இருந்து சிறப்பு மருத்துவா்கள் குழு காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு வந்து மருத்துவ சிகிச்சை, ஆலோசனைகள் வழங்குகின்றனா்.

அந்தவகையில், நிகழ்வாரம் சனிக்கிழமை (மே 9) காலை 10 முதல் பகல் 12 மணி வரை நடைபெறக்கூடிய முகாமில், இருதய சிறப்பு மருத்துவா் குழு பங்கேற்கிறது. பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement