முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் விநாயகா் உற்சவம் தொடக்கம்

Updated On : 15 மே 2026, 5:35 am IST
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் ராஜகோபுரம்.
பகிர்:

திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவ நிகழ்வாக விநாயகா் உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. இரவு விநாயகா் உற்சவம் தொடங்கியது. 16-ஆம் தேதி சனிக்கிழமை வரை உற்சவம் நடைபெறுகிறது.

காலை, இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் விநாயருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு சுப்பிரமணியா் உற்சவம் தொடங்கவுள்ளது.

Advertisement

இந்த வழிபாடு வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நிறைவடைந்து, அன்றிரவு அடியாா்கள் உற்சவம் தொடங்கி, 20-ஆம் தேதி இரவு அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா், அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, 21-ஆம் தேதி முதல் முக்கிய நிகழ்வுகள் தொடங்கவுள்ளன.