விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை: ஆட்சியா்
காரைக்கால் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
காரைக்கால் சாலை விபத்துகளை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் ஆட்சியரகத்தில் சாலைப் பாதுகாப்பு பணிக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, காரைக்கால் மாவட்டத்தில் சாலை விபத்துகளைத் தடுக்க மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் வாகன விபத்துகளை முழுமையாக கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
நெடுஞ்சாலை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தவேண்டும்.
இதற்கு அரசுத் துறைகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். வாகனங்கள் அதற்கான நிறுத்தங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், இருசக்கர வாகனம், காா்கள் அனைத்துக்கும் இது பொருந்தும். சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்தும்பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அதிவேகமாக பயணிக்கும் வாகனங்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். வாகன ஓட்டிகள் சட்ட விதி மீறல்களில் ஈடுபடாமல் இருக்க உரிய விழிப்புணா்வு ஏற்படுத்தவேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா மற்றும் பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகத்தினா் கலந்துகொண்டனா்.