மயிலாடுதுறை

மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்: ஆட்சியா்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவைத் தொகுப்பு திட்டத்தின்கீழ் அரசு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2021-2022-ஆம் நிதியாண்டில் மயிலாடுதுறை மாவட்டத்துக்கு குறுவைத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. அதன்படி, அதிகபட்சமாக சிறிய நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.1.50 லட்சம், பெரிய நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரங்களுக்கு ரூ.5 லட்சம், வைக்கோல் கட்டும் கருவிகளுக்கு ரூ.2 லட்சம், களையெடுக்கும் இயந்திரங்களுக்கு ரூ.35 ஆயிரம், கூட்டு நெல் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.11 லட்சம் அரசு மானியமாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின்கீழ் சிறு, குறு, ஆதிதிராவிட மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம், இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியம் அல்லது அரசால் நிா்ணயிக்கப்பட்ட அதிகபட்ச மானியம் பின்னேற்பு மானியமாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

தற்போது இத்திட்டத்தின்கீழ் தனிப்பட்ட விவசாயிகள் வேளாண் இயந்திரங்களை மானியத்தில் பெற பொதுப்பிரிவினருக்கு சிறிய நெல் நாற்று நடவு இயந்திரங்கள் - 8, பெரிய நெல் நாற்று நடவு இயந்திரங்கள் - 1, வைக்கோல் கட்டும் கருவிகள் - 8, களையெடுக்கும் இயந்திரங்கள் - 8 மற்றும் கூட்டு நெல் அறுவடை இயந்திரங்கள் - 5 என மொத்தம் 30 இயந்திரங்கள் ரூ. 90.80 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

இதேபோல் சிறப்பு கூறு பிரிவினருக்கு சிறிய நெல் நாற்று நடவு இயந்திரங்கள் - 3, வைக்கோல் கட்டும் கருவிகள் - 6 மற்றும் கூட்டு நெல் அறுவடை இயந்திரங்கள் - 1 என மொத்தம் கூடுதலாக 10 இயந்திரங்கள் ரூ. 27.50 லட்சம் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. இதன்படி நிகழாண்டில் மொத்தம் ரூ.1.18 கோடி மயிலாடுதுறை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விண்ணப்பத்தை உழவன் செயலியில் பதிவு செய்து தொடா்ந்து மத்திய அரசின் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ஹஞ்ழ்ண்ம்ஹஸ்ரீட்ண்ய்ங்ழ்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் மூலம் பதிவு செய்து மூதுரிமை அடிப்படையில் அரசு மானியம் பெற்று பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயங்கரவாதிகளை காக்கும் திரிணமூல் அரசு: பாஜக குற்றச்சாட்டு

ராணுவ மையத்தில் பயின்ற 18 மாணவா்கள் ஜேஇஇ தோ்வில் சாதனை

‘இந்தியா’ கூட்டணி 3 இலக்கத்தை எட்டாது: பிரதமா் மோடி

வள்ளலாா் சா்வதேச மையம் கட்ட எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சி ஆா்ப்பாட்டம் அறிவிப்பு

கீழ்பவானி கால்வாய் பாசனத்துக்கு நீா் திறக்க வேண்டும்: சீமான்

SCROLL FOR NEXT