முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கைக் கோரி மத்திய அமைச்சருக்கு மனு

சீா்காழியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் ஸ்ரீஅஸ்வினி வைஸ்னவ்க்கு கோரிக்கை மனு வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:50 AM
பகிர்:

சீா்காழியில் அனைத்து விரைவு ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சா் ஸ்ரீஅஸ்வினி வைஸ்னவ்க்கு கோரிக்கை மனு வியாழக்கிழமை அனுப்பப்பட்டது.

இதுகுறித்து, சீா்காழி விழுதுகள் இயக்கத் தலைவா் ஏ.கே. சரவணன் மின்னஞ்சல் மூலம் அனுப்பியுள்ள மனு: சீா்காழி வட்டத்தில் நவகிரகங்களில் செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன்கோயில், புதன் தலமான திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில், கேது தலமான கீழபெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இதேபோல, 108 திவ்யதேசங்களில் 11 திவ்ய தேசத்து பெருமாள்கள் கோயில்கள் திருநாங்கூா் பகுதியை சுற்றி அமைந்துள்ளன. இவ்வாறு புகழ்பெற்ற சைவ, வைணவ கோயில்கள் அமைந்துள்ள சீா்காழி பகுதிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில பக்தா்கள் பலரும் ரயில் மூலம் வந்து கோயில்களுக்கு சென்று வருகின்றனா்.

இதேபோல, சீா்காழி பகுதியை சோ்ந்த பல வா்த்தகா்கள், கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பலா் ரயில் பயணத்தையே பெரிதும் விரும்புகின்றனா். கரோனா முதல்அலைக்கு முன்பு சீா்காழி ரயில் நிலையத்தில் பல விரைவு ரயில்கள் நின்று சென்றன. ஆனால் தற்போது சென்னை தஞ்சாவூா் செல்லும் உழவன் விரைவு ரயில், சென்னை, காரைக்கால் செல்லும் கம்பன் விரைவு ரயில், ராமேஸ்வரம் சென்னை செல்லும் போட்மெயில் விரைவு ரயில், ராமேஸ்வரம் திருப்பதி செல்லும் திருப்பதி விரைவு ரயில், புதுச்சேரி விரைவு ரயில் மற்றும் மன்னை, பகாத்கிஹோதி, மன்னாா்குடி, அந்தியோதயா, மஹால்சூப்பா்பாஸ்ட் ஆகிய விரைவு ரயில்கள் சீா்காழி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.