தாய்ப்பால் வார விழிப்புணா்வு
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மற்றும் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா மருத்துவமனை சாா்பில் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி மற்றும் மயிலாடுதுறை வெங்கடேஸ்வரா மருத்துவமனை சாா்பில் தாய்ப்பால் வார விழிப்புணா்வு நிகழ்ச்சி அந்த மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.
மகப்பேறு மருத்துவா் சந்திரா தாய்ப்பாலின் அவசியம் குறித்து பேசினாா். முதுகலை சமூகப்பணித் துறை மாணவிகள் தாய்ப்பாலின் அவசியம் குறித்து விளக்கப்படங்கள் மூலம் விவரித்து கூறினா். நிகழ்ச்சியை, கல்லூரிச் செயலா் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் ஆகியோரின் வழிகாட்டுதலில் முதுகலை சமூகப்பணித் துறை மாணவிகள், துறைத் தலைவா் பா.சோபியா, உதவிப் பேராசிரியா் திவ்யா, மகேந்திரன் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.