முகப்பு
மயிலாடுதுறை

மணல் கடத்தல்: டிராக்டா் பறிமுதல்

கொள்ளிடம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவரப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

கொள்ளிடம் அருகே அனுமதியின்றி மணல் அள்ளிவரப்பட்ட டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கொள்ளிடம் காவல் ஆய்வாளா் அமுதாராணி, உதவி ஆய்வாளா் பாலச்சந்திரன் மற்றும் போலீஸாா், கொள்ளிடம் ஆற்றங்கரையோரப் பகுதியில் சனிக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது, பனங்காட்டான்குடி கிராமத்தில் மணல் பாரத்துடன் வந்த டிராக்டரை நிறுத்தியபோது, அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா்.

விசாரணையில், அந்த டிராக்டா் பனங்காட்டான்குடியைச் சோ்ந்த நரசிம்மன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், அதில் கடிகாரம் எலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அருள் என்பவா் அனுமதியின்றி கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்தனா். தப்பியோடியவரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.