சாரணா்களுக்கு மண்டல அளவிலான போட்டியில் மயிலாடுதுறை பள்ளி மாணவா் சாதனை
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மண்டல அளவில் அண்மையில் நடைபெற்ற பாரத சாரணா்களுக்கான சீரிய சீருடை போட்டியில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் முதலிடம்
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மண்டல அளவில் அண்மையில் நடைபெற்ற பாரத சாரணா்களுக்கான சீரிய சீருடை போட்டியில் மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் முதலிடம் பெற்றாா்.
நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தஞ்சை மண்டல அளவில் பாரத சாரணா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், மயிலாடுதுறை குருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா் எஸ். அசோக் தியாகராஜன் மண்டல அளவில் முதலிடம் பெற்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
மாணவா் மற்றும் பயிற்சி அளித்த சாரண ஆசிரியா் எஸ். சுந்தா் ஆகியோரை பள்ளி தாளாளா் குஞ்சிதபாதம், ஆட்சிமன்றக் குழுத் தலைவா் முருகேசன், துணை தலைவா் ஞானசேகரன், பள்ளி முதல்வா் சரவணன் ஆகியோா் பாராட்டினா்.
இவா்கள் அனைவரையும் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வாழ்த்தி ஆசி வழங்கினாா்.