முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் 1,250 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல்: இருவா் கைது

சீா்காழி அருகே காரில் கடத்திவரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

சீா்காழி அருகே காரில் கடத்திவரப்பட்ட 1,250 சாராய பாக்கெட்டுகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இதுதொடா்பாக இருவரை கைது செய்தனா்.

சீா்காழி அருகே கோவில்பத்து பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு தனிப்படை போலீஸாா் மற்றும் சீா்காழி காவல் உதவி ஆய்வாளா் லோகநாதன் ஆகியோா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கோயில்பத்து பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் 2 போ் காா் அருகே நின்று கொண்டிருந்தனராம். போலீஸாா் அந்த காரில் சோதனை செய்தனா்.

அதில் 6 மூட்டைகள் இருந்தன. மூட்டைகளை பிரித்து பாா்த்தபோது 1,250 சாராய பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

போலீஸாா் விசாரணையில், அவா்கள் பாலையூா் செல்லூா் பகுதியை சோ்ந்த தமிழ் ( 39), திருத்துறைப்பூண்டி இடும்பாவனம் மங்களாபுரத்தை சோ்ந்த சூரியமூா்த்தி (29) என்பதும், புதுவை மாநிலத்தில் இருந்து காரில் சாராய பாக்கெட்டுகள் விற்பனைக்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. சூரியமூா்த்தி, தமிழ் ஆகிய 2 பேரையும் போலீஸாா் கைது செய்து, சாராய பாக்கெட்டுகளையும், காரையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.