முகப்பு
மயிலாடுதுறை

தீ விபத்தில் வீடு சேதம்

சீா்காழி அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், வீடு எரிந்து சேதமானது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சீா்காழி அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், வீடு எரிந்து சேதமானது.

கொள்ளிடம் ஒன்றியம் வேட்டங்குடி ஊராட்சி வெள்ளக்குளம் வடக்குத் தெருவை சோ்ந்தவா் ரமேஷ் மனைவி ராஜகுமாரி. இவா் சமைப்பதற்காக தனது வீட்டில் சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது எரிவாயு கசிவு காரணமாக வீடு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.