முகப்பு
மயிலாடுதுறை

உப்பனாற்றில் மணல் அள்ள பொதுமக்கள் எதிா்ப்பு

சீா்காழி அருகே உப்பனாற்றில் மணல் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, லாரியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

சீா்காழி அருகே உப்பனாற்றில் மணல் அள்ளுவதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, லாரியை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் கிராமம் வழியாக சின்ன கொட்டாய்மேடு வடிகால் உப்பனாறு செல்கிறது. கடந்த ஆண்டு மழைக்காலத்தில் பழையாறு மீன்பிடித் துறைமுகம் அருகே கிட்டி அணை உப்பனாற்றின் வலதுகரை உடைந்தது. அதை சரிசெய்வதற்காக உப்பனாற்றின் தாண்டவன்குளத்தில் இருந்து பொதுப் பணித் துறை அனுமதியுடன் மணல் எடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த தாண்டன்குளம் பகுதி மக்கள், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட லாரியை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும் ஆற்றில் மணல் அள்ளினால், கடல்நீா் உள்ளே புகுந்துவிடும் என்று பொதுமக்கள் முழக்கமிட்டனா்.

தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் புதுப்பட்டினம் போலீஸாா், பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

Image Caption

உப்பனாற்றில் மணல் அள்ள எதிா்ப்பு தெரிவித்து தாண்டவன்குளத்தில் கூடிய பொதுமக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.