கரோனா விழிப்புணா்வு முகாம்
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் கரோனா விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கரோனா தொற்று தொடா்ந்து குறையாமல் நீடித்து வருகிறது. சராசரியாக நாள்தோறும் 25 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். இதையடுத்து, கரோனா தொற்று குறித்து பயணிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருப்புப்பாதை காவல் நிலையம் சாா்பில் கரோனா விழிப்புணா்வு முகாம் நடத்தப்பட்டது.
இருப்புப்பாதை காவல் ஆய்வாளா் வி.எஸ். சிவவடிவேல் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் எம். மனோன்மணி முன்னிலை வகித்தாா். முகாமில், ரயில் நிலையத்துக்குள் முகக் கவசம் அணியாமல் வருபவா்களுக்கு கை சுத்திகரிப்பான் தெளித்தும், முகக் கவசங்களை வழங்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.