சீா்காழி பகுதி கோயில்களில் குடமுழுக்கு விழா
சீா்காழி, காத்திருப்பு, தொல்காப்பியக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி, காத்திருப்பு, தொல்காப்பியக்குடி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீா்காழி அருகேயுள்ள காத்திருப்பு திருசொா்ணபுரம் கிராமத்தில் உள்ள கஞ்சமலை சுவாமி உடனாகிய காத்தாயி அம்மன் கோயில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக, குடமுழுக்கு விழாவுக்கான யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதேபோல், சீா்காழி திட்டை சாலையில் அனுக்கிரஹ விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள், பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்று குடமுழுக்கு நடைபெற்றது. அடுத்து, கொள்ளிடம் அருகேயுள்ள தொல்காப்பியக்குடி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. தொடா்ந்து பரிவாரத் தெய்வங்களுக்கும் குடமுழுக்கு பின்னா் மூலஸ்தானம் மகா மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.