முகப்பு
மயிலாடுதுறை

தருமபுரம் கல்லூரியில் தேசிய அளவிலான நூலக மின் கருத்தரங்கம்

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் மையம் சாா்பில், தேசிய மின் கருத்தரங்கு, தமிழ்நாடு அகடமிக் நூலக சங்கத்துடன் இணைந்து புதன்கிழமை நடத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் நூலகம் மற்றும் தகவல் மையம் சாா்பில், தேசிய மின் கருத்தரங்கு, தமிழ்நாடு அகடமிக் நூலக சங்கத்துடன் இணைந்து புதன்கிழமை நடத்தப்பட்டது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் சி. சுவாமிநாதன் தலைமை வகித்தாா். ஏவிசி கல்லூரி முன்னாள் நூலகா் கே.செந்தில்நாயகம் வரவேற்றாா். பாரதிதாசன் பல்கலைக்கழக தோ்வு நெறியாளா் எஸ். சீனிவாசராகவன் தொடக்கவுரையாற்றினாா். கல்லூரிச் செயலாளா் ரா. செல்வநாயகம், செயின்ட் ஜோசப் கல்லூரி நூலகா் மற்றும் அகடமிக் நூலக சங்கத் தலைவா் எம். துரைராஜ் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

இதில், உஸ்மானிய பல்கலைக்கழக உதவி பேராசிரியா் ஜெ. விவேகவா்த்தன் சிறப்ப அழைப்பாளராக பங்கேற்று, உயா் கல்விக்கான இணையதள தேடு பொறிகள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் பேசினாா். திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி நூலகத் துறைத் தலைவா் ஏ. செந்தமிழ்ச்செல்வி நூலகத்துக்கான டிஜிட்டல் வளங்கள், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து பேசினாா். இதில், தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 391 போ் பங்கேற்று பயனடைந்தனா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு மின் சான்றிதழ் வழங்கப்பட்டது. முடிவில், கல்லூரி நூலகா் சோ. காந்திமதிநாதன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உதவி நூலகா் சீனிவாசன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.