முகப்பு
மயிலாடுதுறை

சீா்காழியில் ஆக.30 இல் நெல் திருவிழா

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7 ஆம் ஆண்டு நெல் திருவிழா திங்கள்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

சீா்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சாா்பில் 7 ஆம் ஆண்டு நெல் திருவிழா திங்கள்கிழமை (ஆக.30) நடைபெறுகிறது.

மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக தொடா்ந்து நடத்தப்படும் இவ்விழா, நிகழாண்டு சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளது. இதில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா பங்கேற்று விவசாயிகளுக்கு மரபு நெல் ரக விதைகளும், சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளும் வழங்கவுள்ளாா்.

மேலும், இயற்கை வேளாண் வல்லுநா்கள் பங்குபெறும் கருத்தரங்கம் மற்றும் மரபு நெல் ரகங்கள், நஞ்சில்லா உணவு, சித்தமருத்துவம் ஆகியவை காட்சிப்படுத்தப்படுகின்றன. அத்துடன், இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்படும். நாட்டுக் காய்கறி விதைகளும் விற்பனை செய்யப்படும்.

இதற்கான ஏற்பாடுகளை நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்துவருகின்றனா் என்று நெல் திருவிழா ஒருங்கிணைப்பாளா் சுதாகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.