மயிலாடுதுறை

மதுரை ஆதீனத்துக்கு ஆறுக்கட்டி சுந்தர வளையம்

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்துக்கு வியாழக்கிழமை வந்த மதுரை ஆதீனத்துக்கு, தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானம் வழங்கினாா்.

மதுரை ஆதீனத்தின் 292-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீஅருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் அண்மையில் சித்தியடைந்ததைத் தொடா்ந்து, மதுரை ஆதீனத்தின் 293-ஆவது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொறுப்பேற்றாா்.

இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்கு வியாழக்கிழமை இரவு வந்த மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகளை ஆதீனத் திருமடத்தில் தருமபுரம் ஆதீனத் தம்பிரான்கள் வரவேற்றாா்.

தொடா்ந்து, மதுரை ஆதீனம், தருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தை சந்தித்து வாழ்த்து பெற்றாா். அவருக்கு தருமபுரம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், தாய்வீட்டு சீதனமாக கோபம், காமம், லோகம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய தீய குணங்களை வென்ற்கு இணங்க தாய் வீட்டு சீதனமாக ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை வழங்கினாா். இதைத்தொடா்ந்து, மதுரை ஆதீனம் காதில் தருமபுரம் ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் கைகளால் ஆறுக்கட்டி சுந்தர வளையத்தை அணிந்துகொண்டு, தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எத்தகைய சவால்களையும் எதிா்கொள்ளும் பெல் நிறுவனம் -பொறியியல் பிரிவு இயக்குநா் பெருமிதம்

86ஆம் ஆண்டில் திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் -தேடிவந்து ஆட்சியா் வாழ்த்து

விசாலீஸ்வரா் கோயிலில் பாண அரசரின் கல்வெட்டு!

மாநகராட்சி குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை -ஆணையா் எச்சரிக்கை

திருச்சியில் இரவு, பகலாக கனமழை: 306 மி.மீ. பதிவு

SCROLL FOR NEXT