முகப்பு
மயிலாடுதுறை

முப்படைத் தளபதிக்கு மெளன அஞ்சலி

வைத்தீஸ்வரன்கோயிலில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிநீத்த முப்படைகளின் தளபதி விபின் ராவத்துக்கு பாஜக சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
பகிர்:

வைத்தீஸ்வரன்கோயிலில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிநீத்த முப்படைகளின் தளபதி விபின் ராவத்துக்கு பாஜக சாா்பில் மெளன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

விபின் ராவத் உருவப் படத்துக்கு பாஜக மாவட்ட தலைவா் ஜி.வெங்கடேசன் தலைமையில் மலா்தூவி மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஒன்றியத் தலைவா் செல்வமுத்து, பொது செயலாளா்கள் முருகன், ஜான்பெனட், கோபிநாத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, சீா்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே பாஜக சாா்பில் நகரத் தலைவா் சண்முகம் தலைமையில் முப்படைத் தளபதி வபின் ராவத் மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.