ஊராட்சித் தலைவா்கள் போராட்டம் வாபஸ்
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் 20-ஆம் தேதி ஊராட்சித் தலைவா்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனா்.
சீா்காழி வட்டம், கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வரும் 20-ஆம் தேதி ஊராட்சித் தலைவா்கள் நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக வியாழக்கிழமை தெரிவித்தனா்.
ஊராட்சி தொடா்பாக 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தை அறிவித்திருந்தனா். இந்நிலையில், இதுதொடா்பாக, கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு தலைவா் ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில், ஊராட்சித் தலைவா்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தை வாபஸ் பெற்றனா்.