முகப்பு
மயிலாடுதுறை

வைத்தீஸ்வரன் கோயிலில் கிருத்திகை வழிபாடு: தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு

 சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்கழி மாத கிருத்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

 சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாா்கழி மாத கிருத்திகை வழிபாட்டில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்றாா்.

வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயிலில் தனிச்சன்னதியில் செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் மாா்கழி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சண்முகாா்ச்சனை, அலங்காரம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு காறுபாறு சுவாமிகள், வைத்தீஸ்வரன் கோயில் கட்டளை விசாரனை திருநாவுக்கரசுத் தம்பிரான் சுவாமிகள், சீா்காழி கட்டளை விசாரனை சொக்கலிங்கம் தம்பிரான் சுவாமிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.