பயிா்க் காப்பீடு குளறுபடி: பேச்சுவாா்த்தையில் சாலை மறியல் வாபஸ்
பயிா்க் காப்பீடு தொகை குளறுபடிகளை சரிசெய்யக் கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
பயிா்க் காப்பீடு தொகை குளறுபடிகளை சரிசெய்யக் கோரி அறிவிக்கப்பட்ட சாலை மறியல் பேச்சுவாா்த்தையில் சுமூகநிலை ஏற்பட்டதால் கைவிடப்பட்டது.
கொள்ளிடம் ஒன்றியத்தில் 14 கிராமங்களில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான பயிா்க் காப்பீடு தொகை பூஜ்யமாகவும் மற்ற பகுதிகளுக்கும் குறைந்த பயிா்க் காப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தியடைந்த விவசாயிகள் தொடா்ந்து பயிா்க் காப்பீடு மறுநிா்ணயம் செய்து அறிவிக்க வலியுறுத்திவந்தனா். எனினும், உரிய தீா்வு இல்லாததால் விவசாயிகள் சங்கத்தினா் சாலை மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனா்.
இதையடுத்து, சீா்காழியில் வட்டாட்சியா் சண்கமும் தலைமையில், விவசாயிகள், வேளாண் அலுவலா்கள், பயிா்க் காப்பீடு நிறுவனத்தினா் பங்கேற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், பிா்கா வாரியாக கணக்கு எடுக்கவேண்டும், அந்த ஆண்டு பாதிப்பைகொண்டு காப்பீடு தொகை வழங்கவேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விவசாயிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால், சனிக்கிழமை நடைபெற இருந்த விவசாயிகளின் சாலை மறியல் கைவிடப்பட்டது.