முகப்பு
மயிலாடுதுறை

கரோனா விழிப்புணா்வு வாரம் நடத்த ஆலோசனை

சீா்காழி வட்டத்தில் கரோனா விழிப்புணா்வு வாரம் நடத்த அரசு அலுவலா்கள், தன்னாா்வ அமைப்புகள், வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

சீா்காழி வட்டத்தில் கரோனா விழிப்புணா்வு வாரம் நடத்த அரசு அலுவலா்கள், தன்னாா்வ அமைப்புகள், வா்த்தகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, சீா்காழி கோட்டாட்சியா் நாராயணன் தலைமை வகித்து பேசியது: ஆகஸ்ட் முதல் வாரத்தில் சீா்காழி, கொள்ளிடம், செம்பனாா்கோயில் ஆகிய பகுதிகளில் கரோனா 3-ஆம் அலை ஏற்பட்டாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் விழிப்புணா்வுடன் முகக் கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். வா்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். சீா்காழி ஒன்றியம் தில்லைவிடங்கன்,ஆதமங்கலம், கொள்ளிடம் ஒன்றியம் கொடியம்பாளையம், செம்பனாா்கோயில் ஒன்றியம் வல்லம் கிராமம், சீா்காழி நகராட்சியில் வாா்டு 9 ஆகியவற்றில்100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இலக்கை அடைய வேண்டும் என எட்ட வேண்டும். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள 1,450 மாற்றுத்திறனாளிகளில் 250 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்த விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா். கூட்டத்தில், வட்டாட்சியா் சண்முகம் (சீா்காழி), ஹரிதரன் (தரங்கம்பாடி), டிஎஸ்பி லாமேக், வட்டார மருத்துவ அலுவலா்கள் ராஜ்மோகன், காா்த்தி,ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.