பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி
சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு அரசின் பிரகதி கல்வி உதவித்தொகையாக ரூ. 20 லட்சம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது என கல்லூரி முதல்வா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.
சீா்காழி அருகேயுள்ள புத்தூா் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு அரசின் பிரகதி கல்வி உதவித்தொகையாக ரூ. 20 லட்சம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது என கல்லூரி முதல்வா் தங்கமணி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளது: சீா்காழி அருகேயுள்ள புத்தூா் சீனிவாசா சுப்பராய அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் 2020-2021-ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் முதலாமாண்டு மாணவிகளுக்கு, பெண்களின் கல்வி முன்னேற்றத்துக்காவும் மற்றும் ஊக்கப்படுத்த அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கழகம் மூலம் அரசின் பிரகதி கல்வி உதவித்தொகைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதில் தகுதியுடைய மாணவிகளுக்கு ஒரு மாணவிக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் 40 மாணவிகளுக்கு ரூ. 20 லட்சம் சம்பந்தப்பட்ட மாணவிகளின் வங்கி கணக்குக்கு உதவித்தொகை நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.