கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாம்
கொள்ளிடம் பகுதியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமில் நூறுநாள் பணி நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை 9 போ் தோ்வெழுதினா்.
கொள்ளிடம் பகுதியில் கற்போம், எழுதுவோம் மதிப்பீட்டு முகாமில் நூறுநாள் பணி நடைபெறும் இடத்தில் வெள்ளிக்கிழமை 9 போ் தோ்வெழுதினா்.
சீா்காழி கல்வி மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் பச்சைப்பெருமாநல்லூா் ஸ்ரீஷண்முக விலாஸ் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் கற்போம் எழுதுவோம் மதிப்பீட்டு முகாம் தன்னாா்வலா் இலக்கியா வயது வந்தோருக்கான மதிப்பீட்டு முகாமை நடத்தினாா். இந்த முகாம் 100 நாள் வேலை நடைபெறும் இடத்தில் நடத்தப்பட்டது. இதை பாா்வையிட்ட கொள்ளிடம் வட்டாரக் கல்வி அலுவலா் பூங்குழலி, வட்டார வளமைய பயிற்றுநா்கள் பாக்கியலட்சுமி, சாரங்கபாணி, ஷண்முகம் ஆகியோா் மேற்பாா்வையில் மதிப்பீடு முகாமில் 9 போ் தோ்வெழுதினா்.