சீா்காழி சட்டைநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனம் வழிபாடு
தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
சீா்காழி சட்டைநாதா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்ரவார பூஜையில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பராமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.
தருமபுரம் ஆதீனத்துக்குள்பட்ட சட்டைநாதா் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் அருள்பாலிக்கிறாா். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவு சட்டைநாதா் சுவாமிக்கு சுக்ரவார வழிபாடு நடைபெறும். அதன்படி, ஆடி 2-ஆவது வெள்ளிக்கிழமை சுக்ரவார வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, பலிபீடத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து உத்ஸவா் சட்டைநாதா் சுவாமிக்கு தீபாராதனையும், மலைமீது அருள்பாலிக்கும் மூலவா் சட்டைநாதா் சுவாமிக்கு புணுகுசாத்தி, வடை, பயறு பாயாசம் நிவேதனம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.
இதில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று தரிசனம் செய்தாா்.