2-வது நாளாக வெறிச்சோடிய பழையாறு துறைமுகம்
சீா்காழி அருகே பழையாறு துறைமுகத்திலிருந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், துறைமுகம் வெறிச்சோடியது.
சீா்காழி அருகே பழையாறு துறைமுகத்திலிருந்து 2-வது நாளாக வியாழக்கிழமையும் மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், துறைமுகம் வெறிச்சோடியது.
இத்துறைமுகத்திலிருந்து தினமும் 300 விசைப்படகுகள், 300 பைபா் படகுகள் மற்றும் 250 நாட்டு படகுகள் மூலம் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனா். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக 2-வது நாளான இவா்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
மேலும், துறைமுக வளாகத்தில் மீன்களை தரம் பிரித்தல், வெளியூா் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மீன்களை அனுப்பிவைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்களும் பணிக்குச் செல்லவில்லை. இதனால், துறைமுகப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.