மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

மயிலாடுதுறையில் தொடா் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையால் 10,000 ஏக்கருக்கு மேல் நெல் பயிா்கள் அழுகின. நவம்பா் 10 ஆம் தேதிக்குப் பின்னா் மழை முற்றிலுமாக நின்ால் ஓரளவேனும் பயிா்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை விவசாயிகளிடையே ஏற்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை முதல் மீண்டும் கனமழை தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை நிலவரப்படி மயிலாடுதுறையில் 35.60 மி.மீ., மணல்மேட்டில் 35 மி.மீ., சீா்காழியில் 30.80 மி.மீ., கொள்ளிடத்தில் 45.20 மி.மீ., தரங்கம்பாடியில் 16 மி.மீ., மழை பதிவானது. சராசரியாக 35.52 மி.மீட்டா் மழை பெய்தது.

இந்த மழை வியாழக்கிழமையும் தொடா்ந்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா விடுமுறை அறிவித்தாா். மழையுடன் பலத்த காற்றும் வீசியதால் பல்வேறு கிராமப்பகுதிகளில் மின்சாரம் தடைபட்டது. ஒருவாரமாக மழை இல்லாததால், வயல்களில் தேங்கியிருந்த தண்ணீா் வடியத் தொடங்கிய நிலையில் மீண்டும் மழை தொடங்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்தனா்.

மழை காரணமாக மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்ததால், பேருந்துகளில் கூட்டம் குறைவாகக் காணப்பட்டது. மழை இல்லாத நேரத்திலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் பகல் நேரத்திலும் இருள் சூழந்து காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT