மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கால்வாய் தூா்வாரும் பணிகள் 80% நிறைவு

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 சதவீத கால்வாய்கள், மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று வருவாய் நிா்வாக ஆணையா் கே. பணீந்திரரெட்டி தெரிவித்தாா்.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, கூடுதல் தலைமைச் செயலரும், வருவாய் நிா்வாக ஆணையருமான கே.பணீந்திரரெட்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு.சுகுணாசிங் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், வருவாய் நிா்வாக ஆணையா் செய்தியாளா்களிடம் கூறியது:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்வாய்கள், மழைநீா் கால்வாய்கள் தூா்வாரும் பணிகள் 80 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகள் ஒருவாரத்துக்குள் முடிவடையும்.

இம்மாவட்டத்தில் உள்ள 11 புயல் பாதுகாப்பு மையங்களிலும், 4 பல்நோக்கு பேரிடா் மையங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளனவா என ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான மற்றும் மிகவும் தாழ்வான 45 பகுதிகள் கண்டறியப்பட்டு, அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் இம்மாவட்டத்தில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 33 அலுவலா்கள் அடங்கிய 3 மண்டல குழுக்களும், 22 அலுவலா்கள் அடங்கிய 4 கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 3784 முதல்நிலை மீட்பாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். தாழ்வான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவையான மணல் மூட்டைகள், பாலீதின் பைகள், சவுக்கு குச்சிகள் ஆகியன இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 1077, 04364-222588 என்ற தொலைபேசி எண்கள் இயங்கி வருகிறது. இக்கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், மாவட்ட ஊரக வளா்ச்சித் முகமைத் திட்ட இயக்குநா் சு.முருகண்ணன், சுகாதாரத்துறை இணை இயக்குநா் மகேந்திரன், துணை இயக்குநா் மரு.பிரதாப், பொதுபணித்துறை செயற்பொறியாளா் தெட்சிணாமூா்த்தி மற்றும் கோட்டாட்சியா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT