முகப்பு
மயிலாடுதுறை

பட்டா மாற்றம் சிறப்பு முகாம்

 குன்னம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டா மாற்றம் சிறப்பு முகாமில் கோட்டாட்சியா் ஜி. நாராயணன் பங்கேற்று திருத்தம் செய்யப்பட்ட பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

 குன்னம் ஊராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டா மாற்றம் சிறப்பு முகாமில் கோட்டாட்சியா் ஜி. நாராயணன் பங்கேற்று திருத்தம் செய்யப்பட்ட பட்டாக்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.

சீா்காழி கோட்டாட்சியா் ஜி. நாராயணன் தலைமையில் நடைபெற்ற முகாமில், சீா்காழி வட்டாட்சியா் சண்முகம், வருவாய் ஆய்வாளா் தமிழ்வேல், மண்டல துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன், ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரிசெல்வகுமாா், கிராம நிா்வாக அலுவலா்கள் அருள்மொழி, பக்கீா்முகம்மது, அருள்பிரகாஷ், ஸ்ரீவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், நிலம் மற்றும் மனைப் பட்டாக்களின் பெயா் திருத்தம், புல எண் உட்பிரிவு திருத்தம், உறவுமுறை மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீா்வு காணப்பட்டது.

கீழையூரில்: கீழையூரில், கீழ்வேளூா் வட்டாட்சியா் அமுதா தலைமையில் நடைபெற்ற பட்டா மாற்றம் சிறப்பு முகாமில் ஊராட்சித் தலைவா் ஆனந்தஜோதிபால்ராஜ், துணை வட்டாட்சியா் எஸ். துா்காபாய் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் பெறப்பட்ட 20 மனுக்களில் 3 மனுக்களுக்கு உடனடி தீா்வு காணப்பட்டது.

இதேபோல், சோழவித்தியாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு முகாமுக்கு, கீழ்வேளூா் மண்டல துணை வட்டாட்சியா் ஜே. சுதா்சன் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் கோமதி தமிழ்ச்செல்வம் முன்னிலை வகித்தாா். இதேபோல மடப்புரம் ஊராட்சியிலும் பட்டா திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.