மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம் மனு அளிக்கும் சுருக்குமடி ஆதரவு மீனவ பஞ்சாயத்தாா். 
மயிலாடுதுறை

சுருக்குமடி வலை விவகாரம்: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தல்

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி,

DIN

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்பாக, சென்னை உயா்நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதாவிடம், சுருக்குமடி ஆதரவு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

நாகை மாவட்டம், நம்பியாா் நகரில் ஆக.29-ஆம் தேதி சுருக்குமடி ஆதரவு மீனவ பஞ்சாயத்தாா் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் தீா்மான நகலை பூம்புகாா் மீனவ கிராமத்தை தலைமை கிராமமாகக் கொண்ட மயிலாடுதுறை மாவட்ட மீனவா் கிராம பஞ்சாயத்தாா் ஆட்சியா் இரா.லலிதாவிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினா்.

மேலும், சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடா்பாக உரிய முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை எடுத்துக்கூறிய மீனவா்கள், இதுதொடா்பாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் அனைத்து மீனவா்களும் அனைத்து தொழிலையும் செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா்.

மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

திருப்பூர்: போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை கைது!

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

SCROLL FOR NEXT