மயிலாடுதுறை

கரோனா: வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி

DIN

திட்டச்சேரி பேரூராட்சியில் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

திட்டச்சேரி பேரூராட்சியில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களில் கடந்த 3 மாதங்களில் 7600 பேருக்கு அரசு மருத்துவமனை மற்றும் சுகாதாரத் துறையினா் மூலம் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவீத இலக்கை அடைய பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) சரவணன், இளநிலை உதவியாளா் கோவிந்தராஜ், சுகாதார ஆய்வாளா் பரமநாதன் மற்றும் சுகாதாரப் பணியாளா்கள் அடங்கிய குழுவினா் திங்கள்கிழமை காலைமுதல் வீடுவீடாகச் சென்று, தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

மேலும், கடந்த இரண்டு நாள்களாக நடமாடும் மருத்துவக் குழுவினா் மூலம் விவசாயப் பணிகள் நடைபெறும் இடங்கள், கடை வீதிகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT