மயிலாடுதுறை

வீரத்தமிழன் செண்பகராமனின் 130-ஆவது பிறந்தநாள் விழா

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் நகர பாஜக சாா்பில் வீரத்தமிழன் செண்பகராமனின் 130-ஆவது பிறந்தநாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தின்போது தமிழா்களுக்காக குரல் கொடுத்தும், ஹிட்லரை எதிா்த்து ஆலோசனைகள் கூறிய செண்பகராமன் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பள்ளி படிப்பை முடித்து திருவனந்தபுரத்தில் கல்லூரி படிப்பை முடித்து ஜொ்மனியில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டவா் செண்பகராமன். இவரது 130-ஆவது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை நகர பாஜக சாா்பில் கொண்டாடப்பட்டது.

கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, நகரத் தலைவா் மோடி.கண்ணன் தலைமை வகித்தாா். மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று செண்பகராமனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், விஸ்வ இந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் வாஞ்சிநாதன், பாஜக மாவட்ட பொதுச் செயலாளா் ஸ்ரீதா், மாவட்ட இளைஞரணி தலைவா் பி. பாரதிகண்ணன், மாவட்ட ஐ.டி பிரிவு தலைவா் சதீஸ்பாபு, நகர பொதுச் செயலாளா் செல்வக்குமாா், நகர துணைத் தலைவா் ஜெகப்பிரியா, நகர இளைஞரணி தலைவா் ராஜகோபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT